Home உலகம் பெல்ஜியம் பிரேசிலைத் தோற்கடித்தது (2-1)

பெல்ஜியம் பிரேசிலைத் தோற்கடித்தது (2-1)

1076
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 3.55 மணி நிலவரம்) லகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கால் இறுதிச் சுற்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற பிரேசில் – பெல்ஜியம் இடையிலான போட்டியில் 2-1 கோல் கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்து பெல்ஜியம் அரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியது.

இனி அரை இறுதிச் சுற்றில் பெல்ஜியம் பிரான்சைச் சந்திக்கும்.

முதல் கோல் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புகுத்தப்பட்டது. பிரேசில் கோல் வளையத்தில் பிரேசிலின் ஆட்டக்காரர் பெர்னாண்டினோ கால் பட்டு பிரேசிலின் சொந்த கோலாக முதல் கோல் பெல்ஜியத்துக்கு சாதகமாகப் புகுந்தது.

#TamilSchoolmychoice

இரண்டாவது கோலை பெல்ஜியத்தின் டி புருயின் அபாரமாக விளையாடி 31-வது நிமிடத்தில் பந்தை அடித்து கோலாக்கினார்.

இதைத் தொடர்ந்து தற்போது பெல்ஜியம் 2-0 கோல் எண்ணிக்கையில் முதல் பாதியில் முன்னணி வகித்தது.

எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 76-வது நிமிடத்தில் பிரேசிலின் அகஸ்டோ ஒரு கோல் போட்டு பிரேசிலுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

ஆட்டம் முழுவதிலும் பிரேசில் கடுமையாகப் போராடினாலும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. பல வாய்ப்புகளையும் கோட்டை விட்டது.

இதைத் தொடர்ந்து 2-1 கோல் எண்ணிக்கையில் இறுதியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.