Home உலகம் பெல்ஜியம் 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்)

பெல்ஜியம் 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்)

1170
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 2.45 மணி நிலவரம் ) லகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அபாரமாக விளையாடி 2 கோல்கள் கோட்டு பிரேசில் குழுவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

முதல் கோல் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புகுத்தப்பட்டது. பிரேசில் கோல் வளையத்தில் பிரேசிலின் ஆட்டக்காரர் பெர்னாண்டினோ கால் பட்டு பிரேசிலின் சொந்த கோலாக முதல் கோல் பெல்ஜியத்துக்கு சாதகமாகப் புகுந்தது.

இரண்டாவது கோலை பெல்ஜியத்தின் டி புருயின் அபாரமாக விளையாடி 31-வது நிமிடத்தில் பந்தை அடித்து கோலாக்கினார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து தற்போது பெல்ஜியம் 2-0 கோல் எண்ணிக்கையில் முதல் பாதியில் முன்னணி வகித்து வருகின்றது.

முதல் பாதி ஆட்டத்தின் பெரும்பகுதியில் பிரேசில் தாக்குதல் நடத்தினாலும், சிறப்பாக விளையாடினாலும் ஏனோ கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது.

ஆனால் பெல்ஜியம் குழுவினர் பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறிய ஓரிரு தடவைகளில் சிறப்பாக கோல் அடித்து வெற்றிப் பாதையில் தற்போது இருந்து வருகின்றனர்.