Home உலகம் புக்கெட் தீவில் படகு விபத்து – 33 பேர் மரணம் – 23 பேர் காணவில்லை

புக்கெட் தீவில் படகு விபத்து – 33 பேர் மரணம் – 23 பேர் காணவில்லை

998
0
SHARE
Ad

பேங்காக் – தாய்லாந்தின் உல்லாசத் தீவான புக்கெட் கடல் பகுதியில் முக்குளிப்பில் (Diving) ஈடுபடவிருந்த உல்லாசப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றும் பயணிகள் உல்லாசப் படகு ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் 23 பேர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (ஜூலை 5) இந்த விபத்து நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னதாக வந்த தகவல்கள் 58 பேர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்கின்றது என்றும் தெரிவித்தன.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

கடல் சீற்றம் காரணமாக உயர்ந்த அலைகளினால் இந்தப் படகுகள் கவிழ்ந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.