Home உலகம் தாய்லாந்து குகை: உலகம் எங்கும் நிம்மதிப் பெருமூச்சு! அனைவரும் மீட்பு

தாய்லாந்து குகை: உலகம் எங்கும் நிம்மதிப் பெருமூச்சு! அனைவரும் மீட்பு

1211
0
SHARE
Ad

பேங்காக் – உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் கவனத்தை கடந்த சில நாட்களாக ஈர்த்து வந்த தாய்லாந்து குகையில் 13 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம், அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அந்தக் குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள  குகை ஒன்றில் கடந்த ஜூன் 23 முதல் 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் வெள்ளம் காரணமாகச் சிக்கிக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இன்று செவ்வாய்க்கிழமை மாலை வரை, ஆகக் கடைசியாக, 10 பேர் மீட்கப்பட்டு, இரண்டு சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளர் மட்டுமே அந்தக் குகையில் எஞ்சியிருந்தனர்.

தற்போது அவர்களும் மீட்கப்பட்டு விட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.