Home கலை உலகம் அச்சம் தவிர் – 49″ எல்இடி தொலைக்காட்சியை வெல்லப் போவது யார்?

அச்சம் தவிர் – 49″ எல்இடி தொலைக்காட்சியை வெல்லப் போவது யார்?

1249
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எஸ்.எஸ்.விக்னேஸ்வரன், கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின், குபேன் மகாதேவன், ஜெய், ஷாலு, அகிலா, ஷீஜே, சிகே, டேடி ஷேக் என ஒரு பெரிய உள்நாட்டு நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘அச்சம் தவிர்’ திரைப்படம், கடந்த ஜூலை 5-ம் தேதி முதல், நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையீடு கண்டு மக்களின் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், அதே வேளையில் நெஞ்சை உறைய வைக்கும் திகில் திரைக்கதை என இரட்டைக் கலவையாக – உருவாகியுள்ள இத்திரைப்படத்தைப் பார்த்த மக்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என நட்பு ஊடகங்களின் வழியாகத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,திரையரங்கிற்கு வரும் மக்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், பரிசுப் போட்டி ஒன்றை ‘அச்சம் தவிர்’ படக்குழுவினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இப்போட்டியின் விதிமுறைகளின் படி, திரையரங்கிற்கு சென்று ‘அச்சம் தவிர்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அந்த டிக்கெட்டுகளை வீசிவிடாமல் பத்திரப்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்பரிசுப் போட்டியில் பங்கேற்க நீங்கள் வாங்கிய டிக்கெட்டுகள் அவசியம்.

#TamilSchoolmychoice

உங்கள் வீட்டில் உள்ளவர்களையோ அல்லது நண்பர்களையோ, அச்சம் தவிர் டிக்கெட்டுடன் போலியாக அச்சமூட்டி (Prank) (முடிந்தவரையில், உண்மை தெரிந்ததும் அவர்களும் அதனை ரசிக்கும் படி வேடிக்கையாக இருப்பது நன்று) அதனை உங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, அதனை ‘அச்சம் தவிர்’ இன்ஸ்டாகிராமிற்கு டேக் செய்து @atchamthavirmovie, #ATFEARNOT என்ற ஹேஷ்டேக்கையும் இட வேண்டும். இப்பரிசுப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 15-ம் தேதியோடு நிறைவடைகின்றது.

இப்போட்டியில் வெற்றியடையும் ரசிகர்களுக்கு, 49 அங்குல எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி பரிசாக வழங்கப்படவிருக்கிறது. இது குறித்த மேல் விவரங்களை https://web.facebook.com/atchamthavirt/ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது http://pu4lyf.com/AtchamThavir  என்ற இணையதளத்திலோ சென்று அறிந்து கொள்ளலாம்.