Home நாடு யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது

1490
0
SHARE
Ad

பத்துமலை – எதிர்வரும் 2018-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள  தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல் ஒன்றை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானம் இலவசமாக வழங்குவதாக ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா (படம்) அறிவித்துள்ளார்.

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி பாடத்திற்கான இந்த நூல் 6 மாதிரி வினா விடைகளைக் கொண்டு ஒரு தேர்வு வழிகாட்டியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இதே நிறுவனம் 5 மாதிரி வினா-விடைத் தாள்களுடன் இந்த நூலைப் பதிப்பித்திருந்தது. கடந்த ஆண்டும் அந்த நூலை சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்கியது.

யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி 2018 நூல் முகப்பு

தற்போது இந்த நூல் மேம்படுத்தப்பட்டு 6 மாதிரி வினா விடைகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தோடு, கூட்டரசுப் பிரதேச மாநிலப் பள்ளிகளுக்கும் இந்த நூலை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது.

#TamilSchoolmychoice

இந்த நூல்களை வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018-ஆம் நாள் காலை 10.00 மணிக்கு பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திலுள்ள பொது மண்டபத்தில் நடைபெறுகிறது.

சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து தங்களின் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கேற்ப தங்கள் பள்ளிகளுக்குரிய நூல்களை நேரடியாகப் பெற்றுச் செல்லலாம்.

நிகழ்ச்சி குறித்த விவரங்களுக்கு பத்துமலையில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 03-61896284