Home Photo News கிரீஸ் காட்டுத் தீ – அதிர்ச்சியும் உருக்கமும்! (படக் காட்சிகள்)

கிரீஸ் காட்டுத் தீ – அதிர்ச்சியும் உருக்கமும்! (படக் காட்சிகள்)

1822
0
SHARE
Ad

ஏதென்ஸ் – கடந்த சில நாட்களாக அகில உலகத்தையும் உலுக்கியிருப்பது கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயும் அதைத் தொடர்ந்த மரண சம்பவங்களும்! இந்தக் காட்டுத் தீயின் உக்கிரத் தாண்டவமும், அதைத் தொடர்ந்த பாதிப்புகளும் அதிர்ச்சிகளையும், உருக்கத்தையும், சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி எண்ணிலடங்கா விலங்குகளும் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரண எண்ணிக்கை இதுவரை 80-ஐ தாண்டியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர். இன்னும் நூற்றுக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

கிரீஸ் காட்டுத் தீயைத் தொடர்ந்து அந்நாட்டு பொதுமக்கள் தாங்கள் காணும் அதிர்ச்சி தரும் – உருக வைக்கும் – சோகம் ததும்பும் – பிரமிப்பூட்டும் தீயின் கோரத் தாண்டவக் காட்சிகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்கின்றன. சொற்களால் வர்ணிக்க முடியாததை இந்தப் புகைப்படங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட அத்தகைய சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice