Home உலகம் ஏதென்ஸ் காட்டுத் தீ – மரண எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது

ஏதென்ஸ் காட்டுத் தீ – மரண எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது

1212
0
SHARE
Ad
கிரீஸ் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளைக் காட்டும் வரைபடம்

ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டில் அட்டிகா வட்டாரத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மேலும் 164 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் குறைந்தது 23 பேர் குழந்தைகளாவர். மேலும் 100 பேரை இதுவரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண எண்ணிக்கை 100-ஐத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையான நிலையில், நூற்றுக்கணக்கான கார்கள் பாதிப்புற்று மீண்டும் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

கடந்த 24 மணி நேரத்தில் 47 தீவிபத்துகள் நிகழ்ந்தன என்றும் அதில் 15 தீப்பிடித்த சம்பவங்கள் ஏதென்ஸ் நகரைச் சுற்றி நிகழ்ந்தன என்றும் அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 700 பேர் இந்த சம்பவங்களில் இருந்து தப்பித்திருக்கின்றனர்.