Home இந்தியா கருணாநிதிக்கு தொற்று: வீட்டிலேயே சிகிச்சை

கருணாநிதிக்கு தொற்று: வீட்டிலேயே சிகிச்சை

1370
0
SHARE
Ad

சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது இல்லத்தை மருத்துவ வசதிகளோடு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மாற்றியமைத்துள்ளனர்.

முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு காரணமாக அவருக்கு இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் அவரை நேரில் காண யாரும் வரவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து கருணாநிதி குறித்து பல்வேறு ஆரூடங்கள் கிளம்பியுள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 3-ஆம் தேதி தனது 95-வது வயது பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார்.