Home சமயம் கோவில் மணி அடிக்கக் கூடாது : காஜாங் நகராண்மையின் உத்தரவு ரத்து

கோவில் மணி அடிக்கக் கூடாது : காஜாங் நகராண்மையின் உத்தரவு ரத்து

865
0
SHARE
Ad

Hindu-Temple---Slider 1பாங்கி, ஜனவரி 19 – காஜாங் நகராண்மைக் கழகம் அண்மையில் பாங்கி லாமாவில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் கோவில் மணி அடிக்கக் கூடாது என வழங்கிய உத்தரவு பலத்த சர்ச்சைக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளைப் படித்து விட்டு இந்திய சமுதாயத்தில் பலத்த கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான செனட்டர் எஸ்.டி.சந்திரமோகன், நாராயணன், ஹாஜி மஸ்வான் ஆகியோர் நகராண்மைக் கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ள கடிதத்தை பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் காஜாங் நகராண்மைக் கழக தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதன் தொடர்பில்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாகவும், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.