Home உலகம் அமெரிக்காவுக்கு பார்சலில் வந்த 18 மனித தலைகள்

அமெரிக்காவுக்கு பார்சலில் வந்த 18 மனித தலைகள்

917
0
SHARE
Ad

Post-Parcel-Sliderஇல்லினாய்ஸ், ஜன. 18- அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் விமான நிலையத்துக்கு இத்தாலி ரோம் நகரில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அதை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது பார்சலில் 18 மனித தலைகள் இருந்தன.

யாரையோ கொலை செய்து 18 தலைகளையும் அனுப்பி இக்கிறார்கள் என்று கருதி பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை திறந்து பார்த்த போது 18 தலைகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.

இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக 18 மனித தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. ஆய்வு முடிந்து அந்த மனித தலைகளை மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்கள் பார்சல் மூலம் அனுப்பி உள்ளனர். இதற்கான  ஆவணத்தில் மனித தலை என்று குறிப்பிடாமல் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது