வழக்கமாக கமல்ஹாசன்தான் முத்தக் காட்சியை முன்னிறுத்தி தனது திரைப்படத்தையோ அல்லது படத்தின் முன்னோட்டத்தையோ பிரபலப்படுத்துவார். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் தனுஷ் நடித்திருக்கும் முத்தக் காட்சி பிரபலமாகப் பேசப்படுகிறது.
ஒரே நாளில் வட சென்னை முன்னோட்டம் 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது அந்தப் படத்தின் மீது இரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. வட சென்னை படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: