Home இந்தியா கலைஞரை நலம் விசாரித்த மஇகா தலைவர்கள்

கலைஞரை நலம் விசாரித்த மஇகா தலைவர்கள்

1638
0
SHARE
Ad

சென்னை – மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக மஇகாவின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, உதவித்தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் உள்ளிட்ட மஇகா தலைவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

காவேரி மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அந்த மஇகா தலைவர்கள் நலம் விசாரித்தனர். அந்த சந்திப்பின்போது தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜனும் உடனிருந்தார்.