Home English News மகாதீரைச் சாடுவது அன்வாரின் குரலா? (ஒலிப் பேழை இணைப்பு)

மகாதீரைச் சாடுவது அன்வாரின் குரலா? (ஒலிப் பேழை இணைப்பு)

1151
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியதாக ஒலிப் பேழை ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றது.

முன்பு என்மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டைச் சுமத்தியவர், பின்னர் 30 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட நஷ்டத்தை கசானாவுக்கு ஏற்படுத்தியவர் மகாதீர் – என்றும் தற்போது அவரே அதன் தலைவராக வந்து அமர்ந்திருக்கிறார் என்றும் அன்வார் இந்த ஒலிப் பேழையில் சாடுகிறார். தொடர்ந்து, அதனால்தான், அஸ்மின் அலியை எதிர்த்து நிற்க ரபிசி ரம்லிக்கு நான் உத்தரவிட்டேன் எனக் கூறும் அன்வார், காரணம் அஸ்மின் மகாதீரின் கைக்கூலியாக மாறிவிட்டார் என்றும் அந்த உரையில் கூறுகிறார்.

ஆனால், தான் அதுபோன்ற வாசகங்களை எங்கேயும் பேசியதில்லை என்றும் அது என் குரல் போல ஒலித்தாலும், அந்த வாசகங்களைப் பேசியது நானல்ல என்று அன்வார் மறுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பிரி மலேசியா டுடே வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அந்த ஒலிப் பேழையை கீழ்க்காணும் இணைப்பின் வழி கேட்கலாம்: