கோலாலம்பூர், மார்ச் 29 – மலேசியாவின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றான மலாயன் வங்கி (Maybank) தனது புதிய கிளையை வட இந்தியாவின் மும்பை நகரத்தில் வருகிற ஜூலை மாதம், 93 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப கட்ட முதலீட்டுடன் தொடங்கவுள்ளது.
இது பற்றி மலாயன் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அப்துல் வாகித் ஓமார் கூறுகையில்,
“மும்பையில் தொடங்கப்படவுள்ள இந்த புதிய கிளை, இந்தோனேசியா அனைத்துலக வங்கியின் 97.4% உரிமத்தின் பேரில் செயல்படவுள்ளது.மேலும் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான தொடர்பை மேம்படுத்தும் வகையில் இவ்வங்கியின் செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.
அத்துடன் மலாயன் குழுமம், தற்போது இருந்துவரும் 30 % சதவிகித அந்நிய முதலீடுகளின் மூலம் கிடைக்கும் லாபத்தை, 40 % சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்தோடு, மேலும் இதுபோன்ற புதிய கிளைகளை பல்வேறு நாடுகளில் தொடங்க திட்டமிட்டு வருவதாகவும் ஓமார் தெரிவித்தார்.