Home கலை உலகம் “வெடிகுண்டு பசங்க” – 1 மில்லியனை நோக்கி…

“வெடிகுண்டு பசங்க” – 1 மில்லியனை நோக்கி…

1705
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வெளியிடப்பட்ட 11 நாட்களிலேயே 880 ஆயிரம் ரிங்கிட் வசூலைத் தாண்டி மலேசியத் திரையரங்குககளில் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது ‘வெடிகுண்டு பசங்க’ – உள்ளூர் தமிழ்ப் படம்!

தங்களின் கலை முயற்சிக்கு மலேசிய இந்திய சமுதாயம் வழங்கியிருக்கும் அமோக ஆதரவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான டெனிஸ் குமார் படக் குழுவின் சார்பில் தங்களின் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

விமலா பெருமாள் இயக்கத்தில், டெனிஸ் குமார்- சங்கீதா நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் தமிழகத்திலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் குறிப்பாக இந்தியர்களிடையே ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கப்படும் நகைகள் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் திரையிடப்பட்டிருக்கும் சில பிரபல தமிழக நடிகர்களின் திரைப்படங்களோடு போட்டி போட்டு,  ‘வெடிகுண்டு பசங்க’ படம் இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்பது இன்னொரு கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.