Home இந்தியா கருணாநிதி நல்லடக்கம் – மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றப் போராட்டம்

கருணாநிதி நல்லடக்கம் – மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றப் போராட்டம்

1112
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் ஆகஸ்ட் 8, முன்னிரவு 12.30 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒன்றைக் கூறுவார்கள். வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் – ஆனால் போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்தவர் கலைஞர் என்று கூறுவார்கள்.

அதற்கேற்ப, அவரது உயிர் பிரிந்தும் அவரது போராட்டம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆம்! இந்த முறை அவர் நடத்திக் கொண்டிருப்பது – அல்லது அவருக்காக அவரது கட்சியினர் நடத்திக் கொண்டிருப்பது – அவரது நல்லுடலை நல்லடக்கம் செய்வதற்கான இடம் கேட்டுப் போராட்டம்!

மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு மறுத்துவிட, திமுக வழக்கறிஞர்கள் குழு, மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் கலைஞருக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என அவசர வழக்கொன்றைப் பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இல்லம் சென்று சமர்ப்பித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு விசாரிக்கப்படவிருக்கிறது. வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து புதன்கிழமை கருணாநிதியின் நல்லுடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பது முடிவு செய்யப்படும்.