Home இந்தியா கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த மோடி வருகிறார்!

கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த மோடி வருகிறார்!

888
0
SHARE
Ad

சென்னை – புதன்கிழமை நடைபெறும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின்  இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புதுடில்லியிலிருந்து புறப்பட்டு வருகிறார்.

காலை 7.30 மணிக்கு புது டில்லியில் இருந்து புறப்படும் மோடி, காலை 10.00 மணிக்கு சென்னை வந்தடைந்து நேராக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவிருக்கும் கருணாநிதியின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவார்.

இதற்கிடையில் கருணாநிதிக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஒரு நாள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

  • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை விமான நிலையம் வந்தடைந்திருக்கிறார். அவர் புதன்கிழமை கருணாநிதியின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவார்.