Home இந்தியா ஓய்வறியா உதயசூரியன் நிரந்தர உறக்கம் கொண்டது

ஓய்வறியா உதயசூரியன் நிரந்தர உறக்கம் கொண்டது

937
0
SHARE
Ad

சென்னை – தனது பதின்ம வயது தொடங்கி கடந்த 80 ஆண்டுகளாக தமிழ் மொழி, இலக்கியம், அரசியல், சினிமா, மேடைப் பேச்சு என என பன்முகத் துறைகளில் தனது ஆதிக்கத்தை இறுதி வரை நிலைநிறுத்தி, தமிழர் வாழ்வோடும், தமிழினத்தோடும் இரண்டறக் கலந்திருந்த கலைஞர் மு.கருணாநிதி இன்று இந்திய நேரப்படி மாலை 6.10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் தனது 95-வது வயதில் காலமானார்.

கருணாநிதி என்ற பெயரோடு இணைபிரியாதது அவருடைய உழைப்பு. தமிழக முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், எல்லாக் காலகட்டத்திலும் காலை முதல் இரவு வரை ஓயாது உழைத்தவர் இன்று முதல் தனது வாழ்க்கை ஓட்டத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நிரந்தர ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்.