புதுடில்லி – கலைஞர் மு.கருணாநிதி மறைவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் நேற்று புதன்கிழமை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கலைஞருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு நேற்று ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கலைஞர் இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது கிடையாது.
பொதுவாக தேசிய நிலையிலான தலைவர்களுக்குத்தான் இதுபோன்ற கௌரவங்கள் வழங்கப்படும். அல்லது ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு இத்தகைய கௌரவங்கள் வழங்கப்படும். வெகு அபூர்வமாகவே மாநிலத் தலைவர்களுக்கு இதுபோன்ற கௌரவங்கள்.
அந்த வகையில் கலைஞருக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது.