Home கலை உலகம் பிக் பாஸ் : வீட்டிற்குள் நுழைந்து அதிர்ச்சி தந்த கமல் – வெளியேறிய பொன்னம்பலம்!

பிக் பாஸ் : வீட்டிற்குள் நுழைந்து அதிர்ச்சி தந்த கமல் – வெளியேறிய பொன்னம்பலம்!

1705
0
SHARE
Ad
கமல் – பிக் பாஸ் – கோப்புப் படம்

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஆகஸ்ட்12) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் முதலில் கோட் சூட்டுடன் கம்பீரமாகக் காட்சியளித்து பின்னர் கொஞ்ச நேரத்தில் வேட்டி சட்டைக்கு மாறினார். அதற்குக் காரணம் இருக்கிறது என்றும் கூறிய கமல், யாரும் எதிர்பாராத விதமாக இந்த முறை பிக் பாஸ் அனுமதியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது பங்காக 25 இலட்சம் ரூபாயும், விஜய் தொலைக்காட்சி நிறுனத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாயும் சேர்த்து மொத்தம் 50 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும் கமல் அறிவித்தார்.

இதற்கிடையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரசிகர்களின் வாக்களிப்புக்கு ஏற்ப நடிகர் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

கமல் அவரை மேடைக்கு அழைத்து அவரிடம் அளவளாவினார்.

இந்தக் காட்சிகள் கொண்ட தொகுப்பை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 13) அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஸ்டார் விஜய் 224 அலைவரிசையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் கண்டு இரசிக்கலாம்.