Home இந்தியா கேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி

கேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி

1764
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இந்த முறை அளவுக்கதிகமான மழை பெய்திருப்பதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் 24 அணைகளும் நிரம்பி வழிவதாகவும் பல பகுதிகளில் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் முதல் கட்டமாக வழங்குவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் சினிமா நட்சத்திரங்களும் கேரளாவுக்குத் தங்களின் உதவிகளை வழங்குவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்த வேளையில், சூர்யா-கார்த்தி சகோதரர்களும் தங்களின் சார்பாக 25 இலட்சம் ரூபாய் நிதியை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தமிழ் நாட்டில் காவிரி நதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட இலாகாவினர்