Home கலை உலகம் பிக் பாஸ் 2 : வைஷ்ணவி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 2 : வைஷ்ணவி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

2129
0
SHARE
Ad

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஆகஸ்ட்19) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படும் பங்கேற்பாளர்களின் பட்டியலில் இருந்து நடிகை ஜனனி மற்றும் நடிகை ரித்விகா இருவரும் காப்பாற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் எஞ்சிய மூன்று பேர் டேனியல், சென்றாயன், வைஷ்ணவி ஆகிய மூவராவர். இவர்களில் டேனியல் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வெளியேற்றப்படுபவர்களின் பட்டியல் சென்றாயன், வைஷ்ணவி ஆகிய இருவர் மட்டுமே என்ற அளவில் சுருங்கியது.

#TamilSchoolmychoice

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரசிகர்களின் வாக்களிப்புக்கு ஏற்ப வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார்.

கமல் பின்னர் அவரை மேடைக்கு அழைத்து அவரிடம் அளவளாவினார்.

இந்தக் காட்சிகள் கொண்ட தொகுப்பை இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 20) அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஸ்டார் விஜய் 224 அலைவரிசையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் கண்டு இரசிக்கலாம்.