Home நாடு 16 பில்லியன் முறைகேடு : “இர்வான் செரிகாரைக் கேளுங்கள்”

16 பில்லியன் முறைகேடு : “இர்வான் செரிகாரைக் கேளுங்கள்”

731
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நிதியமைச்சில் முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்படாத வகையில், வருமான வரி செலுத்தியவர்களுக்கு உரிய 16 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை முறைகேடு நடந்திருப்பதாக நேற்று புதன்கிழமை நிதியமைச்சர் லிம் குவான் எங் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த விவகாரம் நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரை நோக்கிக் கேட்கப்பட வேண்டும் என முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறியுள்ளார்.

“அதற்குரிய முறையான ஆவணங்களும் தகவல்களும் இல்லாமல் அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் மலாய் நாளிதழ் தெரிவித்துள்ளது.