Home கலை உலகம் கோலிவுட்டைக் கலக்கும் அமலா பால் நடிக்கும் ‘ஆடை’

கோலிவுட்டைக் கலக்கும் அமலா பால் நடிக்கும் ‘ஆடை’

1681
0
SHARE
Ad

சென்னை – அண்மையில் வெளிவந்து இரசிகர்களைக் கவர்ந்த படங்களில் ஒன்று ‘மேயாத மான்’. இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ரத்னகுமார் தனது அடுத்த படைப்பாக ‘ஆடை’ என்ற படத்தை அமலா பால் கதாநாயகியாக நடிக்க இயக்கி வருகிறார்.

‘ஆடை’ படத்தின் முதல் தோற்றக் காட்சி இன்று வெளியிடப்பட்டது முதல் சமூக ஊடகங்களிலும், கோலிவுட் வட்டாரங்களிலும் பரபரப்பையும், படத்தின் கதை என்ன என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமலா பால் துணிச்சலான ஒரு வேடத்தை ஏற்றிருப்பதையும் படத்தின் முதல் தோற்றக் காட்சியே எடுத்துக் காட்டுகிறது.