ஹாங்காங் – கடந்த பல ஆண்டுகளில் ஹாங்காங் மற்றும் தென் சீனா பகுதிகள் காணாத அளவுக்கான மிகக் கடுமையான புயல் மழையுடன் கூடிய ‘மங்குட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அந்தப் பகுதிகளை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஹாங்காங் அரசாங்கம் 10 எண் அளவுக்கு மிக அபாயகரமான எச்சரிக்கை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளது.
மிகப் பெரிய சேதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் மங்குட் சூறாவளி தற்போது அந்நாட்டைக் கடந்து ஹாங்காங் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அமெரிக்காவின் தென் கரோலினா, வட கரோலினா மாநிலங்களைத் தாக்கியிருக்கும் ‘புளோரன்ஸ்’ என்ற புயல் சேதங்களால் இதுவரையில் 13 பேர் மரணமடைந்துள்ளனர்.