அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டுப் பிரிந்தாலும், சபா, சரவாக் பிரதேசங்கள் தொடர்ந்து மலேசியாவில் இணைந்திருக்க ஒப்புக் கொண்டன.
அதன் காரணமாகத்தான் செப்டம்பர் 16 ஆண்டுதோறும் மலேசியா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, புதிய ஆட்சியில், புதிய அரசியல் சூழ்நிலையில், நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் பக்காத்தான் கூட்டணியின் தலைமையில் மலேசியர்கள் இன்று மலேசிய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று மலேசியா தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான தேசிய தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலேசியா உருவான வரலாற்றை தேதிவாரியாக விவரிக்கிறது கீழ்க்காணும் வரைபடம்: