Home வணிகம்/தொழில் நுட்பம் 3 புதிய வகை ஐபோன்கள் – iPhone XS, iPhone XS Max, iPhone Xr...

3 புதிய வகை ஐபோன்கள் – iPhone XS, iPhone XS Max, iPhone Xr – விரைவில்…

1354
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ – கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஆப்பிள் விடுத்த புதிய சாதனங்களுக்கான அறிவிப்புப்படி 3 புதிய வகை ஐபோன்கள் விரைவில் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை iPhone XS, iPhone XS Max, iPhone Xr என இனி அழைக்கப்படும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து iPhone SE, iPhone 6s, and iPhone X ஆகிய ரக ஐபோன்களை இனி சந்தையில் ஆப்பிள் விற்பனை செய்யாது.

ஐபோன்களுக்கான அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்

ஆக, நிறைய ரக ஐபோன்கள் சந்தையில் விற்கப்பட்டு வந்தது இனி மாற்றியமைக்கப்பட்டு, iPhone XS, iPhone XS Max, iPhone Xr, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7. ஆகிய ரகங்கள் மட்டுமே இனி சந்தையில் விற்பனையில் இருக்கும்.

#TamilSchoolmychoice

ஐபோன் XS 5.8 அங்குல திரையளவையும், XS Max ரகம் 6.5 அங்குல திரையளவையும் கொண்டிருக்கும்.

XS மற்றும் XS Max இரக ஐபோன்கள் வாட்டர் புரூப் எனப்படும் தண்ணீரினால் சேதமடையாத கூடுதல் பாதுகாப்புத் தன்மையையும் பெற்றிருக்கும். இந்த ஐபோன்கள் 2 மீட்டர் ஆழமுள்ள நீரில் 30 நிமிடங்கள் மூழ்கியிருந்தாலும் சேதமடையாத அளவுக்கு பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். எனினும், ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு தண்ணீரினால் ஏற்படும் சேதங்களுக்கு உத்தரவாதம் (warranty) எதனையும் வழங்காது.