Home இந்தியா பாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு

பாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு

1486
0
SHARE
Ad
எச்.இராஜா – பாஜகவின் தேசியச் செயலாளர்

சென்னை – எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்த்து வரும் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் தமிழகக் காவல் துறையினர் வழக்குகளைப் பதிந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்பபுரத்தில் நேற்று சனிக்கிழமை (15 செப்டம்பர்) நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எச் ராஜா, காவல் துறையினரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்த்தரமாக பேசிய காணொளிக் (வீடியோ) காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலைத் தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நடிகர் சித்தார்த்தும் (படம்) தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.இராஜாவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதுவரையில் பொதுவாக அரசியல், சமூக ரீதியான கருத்துகளைச் சொல்லாமல் தவிர்த்து வந்த சித்தார்த் கடுமையான வார்த்தைகளால் ஹெச்.இராஜாவைச் சாடியிருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்ட கருத்து பின்வருமாறு:

“If #TNPolice which shot and killed protestors simply watches this rabid idiot @HRajaBJP as he abuses the High Court, police, minorities and most ironically Hinduism, then it shows what they stand for! This #HindutvaTerrorist should be shown the law and the constitution. #Shame”