Home நாடு மகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்

மகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிங்கையிலிருந்து வெளிவரும் சேனல் நியூஸ் ஆசியா ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பதவி விலகிய பின்னர் மகாதீருக்கு லீ குவான் இயூ பாணியில் மூத்த வழிகாட்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

சிங்கப்பூர் பிரதமராகப் பல ஆண்டுகள் பதவி வகித்த அமரர் லீ குவான் இயூ பதவி விலகிய பின்னர் அவருக்குப் பதிலாக பிரதமர் பொறுப்பேற்ற கோ சோக் தோங் அமைச்சரவையில் மூத்த வழிகாட்டும் அமைச்சராகப் (Minister Mentor) பணியாற்றினார்.

இதே பாணியில் மகாதீருக்கும் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டு அதன் மூலம் அவரது அனுபவமும் அனைத்துலக உறவுகள் மீதிலான அவரது ஆலோசனைகளும் கருத்துகளும் பெறப்படலாம் என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரதமர் பதவியில் தொடர மகாதீர் ஆர்வம் காட்ட மாட்டார் என்றும் அன்வார் தெரிவித்தார்.