Home நாடு பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் செலுத்தினார்

பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் செலுத்தினார்

1028
0
SHARE
Ad
வியாழக்கிழமை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட நஜிப்

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நஜிப் துன்ரசாக்குக்கு நீதிமன்றம் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் கூடிய 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை (ஜாமீன்)  விதித்தது.

இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்ற வளாகம் வந்தடைந்த நஜிப் அந்த பிணைத் தொகையில் ஒரு பகுதியாக 1 மில்லியன் ரிங்கிட்டை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட் இன்று செலுத்தப்பட வேண்டும் என்றும் எஞ்சிய தொகையை நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் ரிங்கிட் வீதம் செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் செலுத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் நேற்று கெடு விதித்திருந்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இன்று காலை 10.55 மணியளவில் நீதிமன்றம் வந்த நஜிப் பிணைத் தொகை செலுத்துவதற்கான நடைமுறைகளை முடித்துக் கொண்டு காலை 11.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

அந்த பிணைத் தொகையை நஜிப் சார்பில் நஜிப்பின் மகன் முகமட் நிசார் மற்றும் முகமட் ஷாரிர் அரிபின் என்ற நபரும் செலுத்தினர்.

நஜிப் மீதான 25 குற்றச்சாட்டுகளை கீழ்க்காணும் வரைபடம் விவரிக்கிறது: