Home நாடு பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

1120
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டுப் பயணத்தை துன் மகாதீர் மேற்கொள்ளவிருக்கிறார்.

முதல் கட்டமாக இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு வருகை தரும் பிரதமர் பின்னர் அங்கிருந்து நியூயார்க் சென்று அங்கு நடைபெறும் ஐக்கிய நாடுகளுக்கான மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொள்வார்.

இரண்டாவது முறையாகப் பிரதமரான பின்னர் மகாதீர் செல்லவிருக்கும் முதல் ஐரோப்பிய நாடு பிரிட்டனாகும். அமெரிக்காவுக்கான வருகை முடிந்ததும் மகாதீர் மீண்டும் இலண்டன் திரும்பி தனது அலுவல் பயணத்தைத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பிரதமரின் வருகையைத் தொடர்ந்து பிரிட்டன்-மலேசியா நாடுகளுக்கிடையிலான தூதரக நல்லுறவுகள் மேலும் வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.