Home நாடு தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!

தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!

1434
0
SHARE
Ad
ஈப்போ நீதிமன்றத்தில் சரவணன்

ஈப்போ – நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக டத்தோ எம்.சரவணன் பெற்ற வெற்றி செல்லாது என அவரது தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது.

இன்று திங்கட்கிழமை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். சரவணன் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆட்சேப மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தார்.

இதன் மூலம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக சரவணன் பெற்ற வெற்றி இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.