Home இந்தியா ரபேல் போர் விமான ஊழல் – ராகுல் தொடர்ந்து தாக்கு

ரபேல் போர் விமான ஊழல் – ராகுல் தொடர்ந்து தாக்கு

754
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கென பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமான விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கம் ஊழல் புரிந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து நாடு முழுமையிலும் பாஜக, காங்கிரஸ் தலைவர்களிடையே பல்வேறு தளங்களில் மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, உத்தர பிரதேசத்தில் உள்ள, தன் சொந்த தொகுதியான, அமேதிக்கு நேற்று சென்ற ராகுல் அங்க நடந்த நிகழ்ச்சியில் “ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. நாட்டின் காவல்காரன் என கூறும் பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், ராணுவ வீரர்களிடம் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளார். அதை, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, பல ஆயிரம் கோடி கடன் வைத்திருக்கும் அனில் அம்பானிக்கு ரபேல் விமானக் கொள்முதலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.