Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் அதிகமானப் பயணத் தொடர்புகளைக் கொண்ட விமான நிலையம்

உலகின் அதிகமானப் பயணத் தொடர்புகளைக் கொண்ட விமான நிலையம்

1058
0
SHARE
Ad
இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம்

இலண்டன் – இன்றைய நவீன உலகில் வியாபார நோக்கங்களுக்காக பயணம் செல்லும் வணிகர்கள் அதிகம் நாடுவது – அதிகமாக நம்பிக்கை வைப்பது – விமான நிலையங்கள் மீதுதான். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு நகரிலிருந்து இன்னொரு நகருக்கும் பயணம் செல்ல உலகம் முழுவதும் பல நாடுகளில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட விமான நிலையங்களில் மிக அதிகமான பயணத் தொடர்புகளை மற்ற நகர்களுடன் கொண்டிருக்கும் விமான நிலையம் எது தெரியுமா?

அந்த விமான நிலையம் இலண்டன் மாநகரில் ஹீத்ரோ விமான நிலையம்தான். எந்த ஒரு விமான நிலையம் உலகின் பல நாடுகளுக்கும் அதிகமான விமானப்பயணத் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது என ஆய்வு செய்ததில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இலண்டன் விமான நிலையம்தான்.

2018-ஆம் ஆண்டின் ஒரு நாளில் 66,000 அனைத்துலக விமானத் தொடர்புகளை இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் சிகாகோவின் ஓ ஹாரே விமான நிலையம் இடம் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடம் பிராங்பர்ட் விமான நிலையத்துக்கும் நான்காவது இடம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்துக்கும் கிடைத்திருக்கிறது.

நமக்கு அருகாமையில் இருக்கும் சிங்கப்பூர் விமான நிலையம் கடந்த 6 வருடங்களாகத் தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே அதிக பயணத் தொடர்புகளைக் கொண்ட விமான நிலையமாக முதல் இடத்தைப் பெற்றிருக்கும் சிங்கப்பூர், அனைத்துலக அளவில் 8-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
அதிகமான விமானங்களைக் கொண்டிருக்கக் கூடிய வசதி என்ற அளவில் உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக பெய்ஜிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.