Home நாடு சைட் ஹமிட் அல்பார் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

சைட் ஹமிட் அல்பார் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

921
0
SHARE
Ad
சைட் ஹமிட் அல்பார்

கோலாலம்பூர் – அம்னோவின் நீண்ட கால உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியில் இணைந்துள்ளார்.

ஒரு வழக்கறிஞருமான சைட் ஹமிட் அல்பார் தரைப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தையாரும் அம்னோவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கியவர்.

ஜோகூரின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருந்த சைட் ஹமிட் அல்பார் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், தற்போது பெர்சாத்துவில் இணைந்திருப்பது அம்னோவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் பெர்சாத்துவில் இணைந்துள்ளதை சைட் ஹமிட் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அம்னோவின் போராட்டங்கள் மீது தான் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், கட்சியின் நோக்கங்களும், சித்தாந்தங்களும் ஒரு சிலரின் சுயநலத்திற்காக திரிக்கப்பட்டும், சுயநலப் போக்கோடும் செயல்படுத்தப்படுவதாக அவர் அண்மையில் சாடியிருந்தார்.