கோலாலம்பூர் – 2018 ஜூலை 31-ஆம் தேதியோடு முடிவடைந்த அரையாண்டுக்கான நிதி அறிக்கையின்படி அஸ்ட்ரோ நிறுவனத்தின் இலாபம் 93.3 விழுக்காடு சரிவடைந்தது. இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பங்குச் சந்தையில் அஸ்ட்ரோ நிறுவனத்தின் பங்குகள் 4.8 விழுக்காடு வரை விலை குறைந்தது.
2018-ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பியதன் காரணமாக அதன் உள்ளடக்கங்களுக்கான செலவிடப்பட்ட பெரும் தொகை காரணமாக தங்கள் நிறுவனத்தின் இலாபம் சரிந்தது என அஸ்ட்ரோ விளக்கியுள்ளது. பலவீனமான ரிங்கிட் நாணய மதிப்பு காரணமாக அதிக அளவிலான தொகையை அந்நியச் செலாவணியாக செலவிட நேர்ந்ததும் இலாப சரிவுக்கான மற்றொரு காரணம் என அஸ்ட்ரோ கூறியிருக்கிறது.