புதுடில்லி – உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும். அரிசியை உணவாகப் பயன்படுத்தும் மிகப் பெரிய சந்தைகளையும் இந்த இரு நாடுகள் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து 100 டன் அரிசி முதல் கட்டமாக சீனாவுக்கு ஏற்றுமதியாவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த அரிசி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரிலிருந்து ஏற்றுமதியாகவிருக்கிறது.
இந்திய அரிசியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கை கடந்த ஜூன் மாதத்தில் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இதுவரையில் இந்தியாவிலுள்ள 19 அரிசி ஆலைகள் நெல்லைப் பதப்படுத்தி அரிசியாக்கி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பதிவு செய்துள்ளன.