Home நாடு இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா

இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா

1143
0
SHARE
Ad
பி.இராமசாமி

பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் ‘சிதைந்த கூடு’எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர்  ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு வெளியீடு காணவிருக்கின்றது.

நிலைபெற்றத் தலைவன், பாவாணர் பிள்ளை தமிழ், பிரபாகரன் பிள்ளை தமிழ் போன்ற உலகப் புகழ்ப்பெற்ற காவியங்களைப் படைத்தவரும், மதிகவின் தேசிய கொள்கைப் பாடலை வரைந்தவருமான பெ.கோ.மலையரசனின் புதிய பாவியமான சிதைந்த கூடு நூல் வெளியீட்டு விழா பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமியின் தலைமையில் நடைபெறும்.

பெ.கோ.மலையரசன்

இந்த நூல் வெளியீட்டு விழாவினை, ஜாலான் பாரு, முனீஸ்வரர் ஆலயத்தின் முழுமையான ஆதரவோடும், பினாங்கு நாம் தமிழர் சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மதிக பினாங்கு மாநிலம், பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பினாங்கு தமிழ் வாழ்வியல் இயக்கம் மற்றும் மேலும் சில பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தனர்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ப.த.மகாலிங்கம்
#TamilSchoolmychoice

தமிழாசிரியரின் கதைப்பின்புலத்தைக் கொண்ட ‘சிதைந்த கூடு’ நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், தமிழாசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொது மக்கள், அரசு சாரா இயக்கத்தின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவரும், கலந்து கொண்டு மிகச்சிறந்த காவியமான சிதைந்த கூடு எனும் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு ஆதரவு தந்து தமிழ் வளர ஒத்துழைக்குமாறும், பேராதரவு வழங்குமாறும் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ப.த.மகாலிங்கம் கேட்டுக்கொள்கிறார்.

தொடர்புக்கு 016-4914962 .