Home நாடு போர்ட்டிக்சன் : சுயேச்சையாகப் போட்டியிட இசா சமாட் அம்னோவிலிருந்து விலகினார்

போர்ட்டிக்சன் : சுயேச்சையாகப் போட்டியிட இசா சமாட் அம்னோவிலிருந்து விலகினார்

884
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நாளை சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட், அதற்கான முதல் கட்ட ஏற்பாடாக அம்னோவிலிருந்து விலகியுள்ளார்.

இசா சமாட் பெல்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் அம்னோ அமைச்சரும் ஆவார். முன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்ட போர்ட்டிக்சன் தொகுதியின் அம்னோ தலைவருமாவார் இசா.

இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை இசா சமான் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice