Home உலகம் இண்டர்போல் தலைவர் ஊழலுக்காக விசாரிக்கப்படுகிறார்

இண்டர்போல் தலைவர் ஊழலுக்காக விசாரிக்கப்படுகிறார்

1204
0
SHARE
Ad

பெய்ஜிங் – கடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும்  இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை பிரிவின் தலைவரான மெங் ஹோங் வெய் (படம்) சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்படுகிறார் என அந்நாடு இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அவர் எங்கே இருக்கிறார் என்ற சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஒரு காலத்தில் பொதுப் பாதுகாப்புக்கான துணையமைச்சராகப் பதவி வகித்த மெங் பல்வேறு தருணங்களில் கையூட்டு பெற்றதற்காகவும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் விசாரிக்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice

பிரான்ஸ் நாட்டிலிருந்து சீனாவுக்கு வந்தடைந்த உடனே மெங் அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  இரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என சவுட் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மெங் காணப்படவில்லை என அவரது மனைவி புகார் ஒன்றைச் செய்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையில் இண்டர்போல் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாக மெங் இண்டர்போலுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் என இண்டர்போல் உறுதிப்படுத்தியுள்ளது.