Home இந்தியா திருச்சி விமான நிலையத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

திருச்சி விமான நிலையத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

1822
0
SHARE
Ad
ஏர் இந்தியா விமானம் – மாதிரி படம்

மும்பை – இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நகருக்கான பயணத்தைத் தொடங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மேலெழும்பிய வேளையில் விமான நிலைய ஓடுதளத்தின் தூண்கள் மீதும், தடுப்புச் சுவர்களின் மீதும் மோதியது.

எனினும், அந்த விமானம் தொடர்ந்து மேலெழும்பிப் பறந்து சென்றது. பின்னர் மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த 136 பயணிகளில் யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை.

எனினும், அந்த விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்திருக்கின்றன.