கோலாலம்பூர் – இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் அஸ்ட்ரோ புதிதாகத் தொடங்கியுள்ள கலர்ஸ் மற்றும் ஸீ தமிழ் உள்ளிட்ட அலைவரிசைகள் ‘சாம்ராட்’ என்ற பெயரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 17) அதிகாரபூர்வமாகத் தொடக்கம் கண்டன.
கடந்த 1 மாதமாக அஸ்ட்ரோ பயனீட்டாளர்களுக்கு இந்த அலைவரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இனி சாம்ராட் என்ற தொகுப்பின் கீழ் இந்த அலைவரிசைகள் வழங்கப்படும்.

நேற்றைய நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருடன் தொலைக்காட்சி அறிவிப்பாளர் அர்ச்சனாவும் ஸீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் புதிய அலைவரிசைகளின் கோலாகலத் தொடக்கத்தின் வழி இனி மலேசியாவில் இந்தியர்கள் 5 துல்லிய ஒளிபரப்புகளைக் (எச்.டி) கொண்ட அலைவரிசைகளைக் கண்டு களிக்க முடியும். இதில் 3 அலைவரிசைகள் முழுக்க முழுக்க தமிழ் அலைவரிசைகளாகும். விண்மீன், கலர்ஸ், ஸீ தமிழ் ஆகிய மூன்று அலைவரிசைகளே அவைகளாகும்.





