Home நாடு சாஹிட் ஹமிடி கைது!

சாஹிட் ஹமிடி கைது!

1644
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் புத்ரா ஜெயாவில் கைது செய்யப்பட்டார். இதனை ஊழல் தடுப்பு ஆணையமும் உறுதிப்படுத்தியது.

புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்தடைந்த சாஹிட் ஹமிடி அங்கு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக இன்றிரவு 9.00 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தின் முன்னால் அம்னோ உறுப்பினர்கள் கூடவேண்டும் என அம்னோ மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் அழைப்பு விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆக்கால் பூடி அறவாரியம் (Akal Budi Foundation) தொடர்பில் 8 இலட்சம் ரிங்கிட் பணம் முறைகேடாகக் கையாளப்பட்டு, சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான பற்று அட்டை (credit card) கடன்களை செலுத்தப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் சாஹிட் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாளை வெள்ளிக்கிழமை சாஹிட் ஹமிடி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.