Home நாடு விழுந்த லயன் ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாருமில்லை

விழுந்த லயன் ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாருமில்லை

909
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஜாவா கடலில் இன்று காலை விழுந்த லயன் ஏர் விமானத்தில் இருந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை, விவரங்கள் குறித்து அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயணிகளின் பட்டியலில் மலேசியர்கள் யாருமில்லை என்றும் விஸ்மா புத்ரா அறிக்கையொன்றின் வழி உறுதிப்படுத்தியது.

எனினும் நிலைமையையும், மீட்புப் பணிகளின் நிலவரங்களையும் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் இதன் தொடர்பில் விளக்கங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணில் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் விஸ்மா புத்ரா மேலும் தெரிவித்தது:

#TamilSchoolmychoice

email mwjakarta@kln.gov.my/jkonsular@gmail.com or call +62215224947.