ஜாகர்த்தா – திங்கட்கிழமையன்று ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் விமானத்தின் மையப் பகுதி கடலுக்கடியில் எங்கிருக்கலாம் என்பதை உத்தேசமாகக் காட்டும் ‘பிங்க்ஸ்” (pings”) எனப்படும் ஒலி சமிக்ஞைகள் தங்களுக்குக் கிடைத்திருப்பதால், விரைவில் விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியும் என இந்தோனிசிய மீட்புப் குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனினும் தொடர்ந்து, சிதைந்த உடல் பாகங்கள், துண்டு துண்டான விமானத்தின் பாகங்கள், பயணிகளின் உடமைகள் என பலவிதமானப் பொருட்களை மீட்புப் படையினர் தொடர்ந்து கண்டெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரைத் தாங்கள் நீக்கியுள்ளதாக லயன் ஏர் நிர்வாகம் அறிவித்துள்ளது.