Home உலகம் லயன் ஏர் விமானம்: கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது

லயன் ஏர் விமானம்: கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது

1371
0
SHARE
Ad
லயன் விமானத்தின் மாதிரி

ஜாகர்த்தா – திங்கட்கிழமையன்று (அக்டோபர் 29) ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனிசியக் கடற்படையின் முக்குளிப்பு வீரர்கள் கடலுக்கடியில் கண்டெடுத்துள்ளனர் என இந்தோனிசிய ஊடகங்கள் அறிவித்தன.

அந்தக் கறுப்புப் பெட்டி கடலுக்கடியில் சேற்றில் சிக்கியிருப்பதைத் தான் கண்டெடுத்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த முக்குளிப்பு வீரர்

எனினும், கண்டெடுக்கப்பட்டது கறுப்புப் பெட்டிதான் என்பதை இந்தோனிசியாவின் அதிகாரத்துவத் தரப்புகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

#TamilSchoolmychoice

இணைக்கப்பட்டிருக்கும் விமானத்தின் மையப் பகுதி கடலுக்கடியில் எங்கிருக்கலாம் என்பதை உத்தேசமாகக் காட்டும் ‘பிங்க்ஸ்” (pings”) எனப்படும் ஒலி சமிக்ஞைகள் தங்களுக்குக் கிடைத்திருப்பதால், விரைவில் விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியும் என இந்தோனிசிய மீட்புப் குழுவினர்  நேற்று அறிவித்திருந்தனர்.

விமானப் பயணிகளின் சிதைந்த உடல் பாகங்கள், துண்டு துண்டான விமானத்தின் பாகங்கள், பயணிகளின் உடமைகள் என பலவிதமானப் பொருட்களை மீட்புப் படையினர் விமானம் விழுந்த கடல் பகுதியில் தொடர்ந்து கண்டெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரைத் தாங்கள் நீக்கியுள்ளதாக லயன் ஏர் நிர்வாகம் அறிவித்துள்ளது.