Home நாடு லிம் குவான் எங் மாத வருமானம் – ரிங்கிட் 86,464.92

லிம் குவான் எங் மாத வருமானம் – ரிங்கிட் 86,464.92

1485
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சேகரித்து இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அந்த ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி நிதியமைச்சர் லிம் குவான் எங் ரிங்கிட் 86,464-92 வருமானத்துடன் அதிக வருமானம் பெறுபவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் சொத்துகளின் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார். எனினும் மேற்குறிப்பிட்ட தொகை லிம் குவான் எங் மட்டும் பெறுகின்ற வருமானமாகும்.

இந்த 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் சபாவின் வாரிசான் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

#TamilSchoolmychoice

எனினும் ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட வருமானமே தவிர, அவர்களின் குடும்பத்தினரின் கூட்டு வருமானம் அல்ல என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

இந்த வருமானத்தில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கடன்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.