Home நாடு ஜோ லோ சட்டப் பாதுகாப்புடன் நாடு திரும்பலாம்

ஜோ லோ சட்டப் பாதுகாப்புடன் நாடு திரும்பலாம்

1520
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் தேடப்படும் வணிகர் ஜோ லோ அரசாங்கத்தின் சட்டப் பாதுகாப்புடன் விரைவில் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக, தங்களுக்குக் கிடைத்த ஆகக் கடைசியான தகவல்களின்படி ஜோ லோ எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 31) அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான துன் டைம் சைனுடின், ஜோ லோ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் தனது செயலாளருடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஜோ லோ நாடு திரும்ப வேண்டும் என்றும், 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட டைம், அப்படி ஜோ லோ செய்யவில்லையென்றால் அவருடன் நான் ஏன் பேச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில், ஜோ லோவைத் தேடிக் கண்டுபிடிப்பதில் தானும் ஒத்துழைக்கவிருப்பதாக முன்னாள் தற்காப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன்னும் தெரிவித்திருந்தார்.

நேற்று ஊடகங்களிடம் பேசிய சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ ஜோ லோவுக்கு மரணம் விளைவிக்க பலர் காத்திருப்பதாகவும், அவரை ‘அமைதிப்படுத்த’ பலர் முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான், அரசாங்கத் தரப்பு சாட்சியாக மாறி, சட்டப் பாதுகாப்புடன் ஜோ லோ விரைவில் நாடு திரும்பலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.