Home நாடு ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!

ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!

931
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வணிகரான லோ தெக் ஜோ தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது குறித்த புதிய தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

ஜோ லோ எனப் பரவலாக அழைக்கப்படும் அந்நபர் எங்கிருக்கிறார் என்பது குறித்து சில நாட்களுக்கு முன்னர் ஆகக் கடைசியாகக் கிடைத்த சில புதிய தகவல்களால் அவரது மறைவிடம் தற்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொகிதின் யாசின் கூறினார்.

அரசாங்கத்தின் முக்கியக் கடப்பாடுகளில் ஒன்று ஜோ லோவைத் தேடிக் கண்டுபிடிப்பது என்றும் கூறிய மொகிதின் யாசின், தான் பிடிபடாமல் இருப்பதற்கு நாடு விட்டு நாடு மாறிக் கொண்டிருக்கிறார் ஜோ லோ என்றும் இதனால், அவரைப் பிடிப்பதற்கு மற்ற நாடுகளில் உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.